search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி பொருட்கள் கொள்ளை"

    புதுக்கோட்டை அருகே நிலக்கிழார் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 25 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் சென்று விட்டனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேசன் (வயது 55). நிலக்கிலாரான இவர் புதுக்கோட்டை பனையப்பட்டி மற்றும் மதுரையில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 2019 வரை செல்வ கணேசன் தனது குடும்பத்தினருடன் பனையப்பட்டியில் உள்ள தனது பெருமாள் இல்லத்தில் வசித்தார். பின்னர் மதுரைக்கு குடி பெயர்ந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த நான்கு வருடமாக பெருமாள் இல்லம் பூட்டப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு பனையப்பட்டி இல்லத்துக்கு செல்வகணேசன் வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். இதுகுறித்து செல்வகணேசன் பனையப்பட்டி போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடம் குறைந்து வந்து விசாரணை நடத்தினார். நிலக்கிழார் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • முகமூடி அணிந்து வந்த 3 பேர் கும்பலுக்கு வலை வீச்சு
    • வீட்டின் கதவை தட்டி தம்பதியை தாக்கி துணிகரம்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 67). இவர் வீட்டின் முன்பு பங்கடை மற்றும் மினி மாவு மில் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பிருந்தா (55). இவர்களுக்கு சூர்யா (30) என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். இதனால் கணவன் -மனைவி வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    வழக்கம் போல் கடையின் ஷட்டரை மூடிவிட்டு நேற்று இரவு வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு இருவரும் தூங்கச் சென்றனர்.

    நள்ளிரவில் முகமூடி அணிந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் வெங்கடாஜலபதியின் கடையின் ஷட்டரை திறக்க முயன்றுள்ளனர். பின்னர் வீட்டின் கதவையும் தட்டினர்.

    சத்தம் கேட்டு எழுந்து வந்த கணவன் மனைவி இருவரும் கதவை திறந்தனர். அப்போது வெளியே நின்றிருந்த மர்ம கும்பல் அவர்களை வீட்டுக்குள் தள்ளி சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் பிருந்தா அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர். வீட்டின் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்து தங்க நாணயம், கம்மல், ரூ. 70 ஆயிரம் ரொக்கம் 2 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டார். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் 10 1/2 பவுன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து வெங்கடாஜலபதி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இன்று காலை டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவலாளியிடம் இருக்கும் சாவியை ஆனந்த் வீட்டில் வேலை செய்யும் பெண் வாங்கி சென்று பணி முடிந்ததும் மீண்டும் கொடுத்து செல்வார்.
    • கொள்ளை தொடர்பாக வீட்டு வேலைக்கார பெண் மற்றும் காவலாளியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இவர் காலையில் வேலைக்கு செல்லும் போது தனது வீட்டு சாவியை அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் கொடுத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி காவலாளியிடம் வீட்டு சாவியை கொடுத்து விட்டு ஆனந்த் பெங்களூர் சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது பூஜை அறையில் இருந்த வெள்ளி சாமி சிலைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் 25 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து ஆனந்த் வடபழனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

    காவலாளியிடம் இருக்கும் சாவியை ஆனந்த் வீட்டில் வேலை செய்யும் பெண் வாங்கி சென்று பணி முடிந்ததும் மீண்டும் கொடுத்து செல்வார். இதைத் தொடர்ந்து கொள்ளை தொடர்பாக வீட்டு வேலைக்கார பெண் மற்றும் காவலாளியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×